குழந்தை கொலை வழக்கு.., பீகாரை சேர்ந்த இளைஞருக்கு நீதிமன்ற காவல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை வன்கொடுமைக்கு ஆளான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவர் பிஸ்கெட் வாங்கித் தருவதாக கூறி குழந்தையை அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் அவரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதன்படி, பிபின் மஞ்சி மீது போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 29ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.