நியூசிலாந்து பந்துவீச்சை அடித்து துவைத்த ஆப்கான் வீரர்: உலகக்கோப்பையில் சரவெடி

New Zealand Cricket Team Afghanistan Cricket Team
By Sivaraj Feb 08, 2026 09:56 AM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் குல்பதின் நைப் அதிரடியாக 63 ரன்கள் எடுத்தார். 

ஆப்கானிஸ்தான் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. 

Gulbadin Naib

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தொடங்க, இப்ராஹிம் ஜட்ரான் 10 ரன்களில் அவுட் ஆனார்.

குல்பதின் நைப் அதிரடி

அடுத்து 27 ரன்கள் விளாசிய குர்பாஸ் ஆட்டமிழக்க, குல்பதின் நைப் அதிரடி ஆட்டத்தில் எதிரணியை கலங்கடித்தார். 

Gulbadin Naib

சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 35 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் இதுதான் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நைப் 81 டி20 போட்டியிலில் 4 அரைசதங்களுடன் 1056 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

Gulbadin Naib