“இதை ஆரம்பிச்சு வச்சதே லாலு பிரசாத் யாதவ் தான்..இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல” - எம்பி ஹேமமாலினி கண்டனம்

minister criticised hemamalini gulabrao patil compares actress to roads
By Swetha Subash Dec 20, 2021 12:07 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

தன்னை பற்றிய தவறான ஒப்பிடுதல்களை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தான் தொடங்கி வைத்தார் என ஹேமமாலினி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா குடிநீர் வினியோக துறை மந்திரி குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பாஜக எம்.பி. யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஆனது.

இதையடுத்து குலாப்ராவ் பாட்டீலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத்,

’சாலைகளை பாஜக எம்பி ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டு விட்டார்.

அவர் தவறான முறையில் அவ்வாறு கூறவில்லை. பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூட ஒருமுறை இது போன்று ஒப்பீடு செய்துள்ளார். ஹேமமாலினியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்’ என விளக்கம் அளித்தார்.

இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள எம்பி ஹேமமாலினி,

‘இதுபோன்று ஒப்பிடுவதை லாலு பிரசாத் தான் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அவரை பின்பற்றி பலரும் இது போன்று பேசி வருகின்றனர். இந்த வகை வாக்கியங்கள் சரியானவை அல்ல’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.