வங்கக்கடலில் உருவாகிறது “குலாப் புயல்”

storm bay of bengal gulab storm
By Fathima Sep 25, 2021 03:56 AM GMT
Report

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி “குலாப் புயலாக” வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும், இந்த புயலுக்கு குலாப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குலாப் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.