வீடியோ கால் வில்லங்கம்: இளைஞரை நிர்வாணமாக்கி பணத்தை சுருட்டிய கும்பல்

gujarat youthcheating
By Petchi Avudaiappan Nov 20, 2021 06:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

குஜராத்தில் வரன் தேடி சென்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி நிர்வாணமாக்கி பணத்தை சுருட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

குஜராத் ஜாம்நகரை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. தெரியாத எண்ணில் இருந்து போன்கால் வந்தததால் அவரும் ஆன் செய்துள்ளார். அதில் பேசிய பெண் படபடப்பில் வேறு நபருக்கு அழைப்பதற்கு பதிலாக உங்களுக்கு அழைத்து விட்டேன். மன்னித்துவிடுங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

அவரின் பேச்சில் மயங்கிய அந்த இளைஞர் அப்பெண்ணிடம் தொடர்ந்து பேசியுள்ளார். அப்போது  தன்னுடைய பெயர் ஜீனத் என அந்த பெண் கூறியுள்ளார். இதனிடையே 34 வயதான அந்த இளைஞர் தான் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாக கூற  உங்களுக்கு ஏற்ற வரன் நான் தேடித்தருகிறேன் என அப்பெண் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து உங்களுக்காக வரன் பார்த்துள்ளேன்.அவர்களும் வந்துவிடுவார்கள். நீங்கள் பேசிவிட்டு செல்லலாம் எனக் கூறி  நவம்பர் 15 ஆம் தேதி நவகம் அனந்தபார் பகுதியில் உள்ள தன்னுடைய அப்பார்ட்மெண்ட் வரும்படி அப்பெண் கூறியுள்ளார்.

அவரின் பேச்சைக்கேட்டு இளைஞரும் அந்த இடத்துக்கு தனியாக சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லை அந்தப்பெண் மட்டும் இருந்துள்ளார். பேசிக்கொண்டிருக்கலாம் வந்துவிடுவார்கள் எனக் கூறிய  அந்தப்பெண்ணின் பேச்சு மெல்ல திசைமாறியுள்ளது. இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்துள்ளனர். அந்த இளைஞர் நிர்வாணமாக இருந்த போது அந்த வீட்டிற்குள் திடீரென இருவர் நுழைந்து  அந்தப்பெண்ணின் அத்தை மாமா எனக் கூறியுள்ளனர்.

மேலும் நிர்வாண நிலையில் இருந்த இளைஞரை புகைப்படம் எடுத்ததோடு எங்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தாய் என போலீசில் புகார் அளித்துவிடுவோம். உன் மீது புகார் அளிக்கக்கூடாது என்றால் ரூபாய் 4 லட்சத்தை கொடுத்துவிட்டு இங்கிருந்து போகலாம் என மிரட்டியுள்ளனர். என்னிடம் அவ்வளவு பணமில்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார். பணம் கொடுக்காமல் இங்கிருந்து நகர முடியாது. இல்லையென்றால் போலீசில் புகார் கொடுத்து விடுவோம் எனக் கூறி மிரட்டத் தொடங்கியுள்ளனர். 

கடைசியில் ரூ.1.5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவரை அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த இளைஞர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.