திருமணமான 4 நாளில் கணவரை கொலை செய்த மனைவி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்
திருமணமான 4 நாளில் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுமண தம்பதி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பாவிக், காந்தி நகர் பகுதியை சேர்ந்த பாயல் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த 4வது நாளில், மனைவி பாயலை அவரது பெற்றோர் வீட்டிலிருந்து அழைத்து செல்ல காந்தி நகருக்கு கிளம்பினார் பாவிக்.
கடத்தல்
ஆனால் வெகு நேரமாக வீட்டிற்கு வராத நிலையில், பாயலின் பெற்றோர், பாவிக்கின் பெற்றோருக்கு அழைத்து பேசியுள்ளனர். பாவிக் ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பி விட்டார் என பாவிக்கின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரு குடும்பத்தினரும் தம்பதிகளை தேட தொடங்கியுள்ளனர். அப்பொது சாலையின் ஓரத்தில் பாவிக்கின் இரு சக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்தது. அப்போது அருகே இருந்தவர்களிடம் விசாரித்த போது, ஒரு கார் ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியதாகவும், அதன் பின்னர் காரில் இருந்து இறங்கிய 3 பேர் கீழே விழுந்தவரை கடத்தி சென்றதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பாயலின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் பாவிக் கடத்தப்பட்டது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாயலிடம் விசாரணை நடத்தினர்.
கொலை
விசாரணையில் தனது கணவரை கடத்தி கொலை செய்ததை பாயல் ஒப்புக்கொண்டுள்ளார். பாயல் ஏற்கனவே கல்பேஷ் என்ற தனது உறவினரை காதலித்து வந்துள்ளார். அவர்களது பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், பெற்றோரின் அழுத்தம் காரணமாக பாவிக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருடன் சேர்ந்து வாழப்பிடிக்காத நிலையில், தந்து காதலரான கல்பேஷ் மற்றும் அவரின் உறவினர்களுடன் சேர்ந்து பாவிக்கை கொலை செய்துள்ளார்.
மறுநாள்(15.12.2024) பாவிக்கின் சடலத்தை நர்மதா கால்வாயில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். பாவிக் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பாயல் கல்பேஷ் மற்றும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.