Viral Video : கிராமத்தில் நுழைந்த சிறுத்தை... - அலறி ஓடிய மக்கள்...!
குஜராத்தில் நவ்சாரி பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கிராமத்தில் நுழைந்த சிறுத்தை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குஜராத் மாநிலம், நவ்சாரி பகுதியில் உள்ள சிக்லியில் உள்ள குந்த் கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து நடமாடி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அந்த சிறுத்தை மரத்தில் ஏறியது. மரத்தில் ஏறிய சிறுத்தை மீது கிராம மக்கள் கற்களை வீசியதால் சிறுத்தைப்புலி ஓடியது. இதைப் பார்த்ததும் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சிறுத்தை அங்கிருந்து வேறு வழியாக ஓடியது.
இருப்பினும், கிராமத்தை சுற்றி சிறுத்தை நடமாடி வருவதால் மக்கள் பெரிதும் பயந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
