குஜராத்- லக்னோ அணிகள் மோதும் 4-வது போட்டி : டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி

ipl2022 GTvsLSG klrahulhardik GTwonthetoss LSGtobatfirst
By Swetha Subash Mar 28, 2022 02:01 PM GMT
Report

ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து இந்த சீசனின் மூன்றாம் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் பஞ்சாபிடன் படு மோசமாக பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

குஜராத்- லக்னோ அணிகள் மோதும் 4-வது போட்டி : டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி | Gujarat Titans Won The Toss Chose To Bowl First

இந்த தொடரின் 4-ம் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டிகான டாஸ்-ஐ வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறது.

இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் ஆடும் லக்னோ சூப்பர் ஜைண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.