62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி..!

Gujarat Titans Lucknow Super Giants TATA IPL
By Thahir May 10, 2022 06:01 PM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி 63 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

டேவிட் மில்லர் 26 ரன் எடுத்தார். ராகுல் திவாட்டியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது.

குஜராத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், லக்னோ அணி 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தீபக் ஹூடா அதிகமாக 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட், யாஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஷுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது.