தமிழக வீரரை நம்ப வைத்து ஏமாற்றிய ஐபிஎல் அணி - கண்கலங்கும் ரசிகர்கள்

IPL2022 gujarattitans saisudharsan GTvRR
By Petchi Avudaiappan Apr 14, 2022 08:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான விளையாடிய குஜராத் அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

நேற்றைய தினம் நவி மும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் 54 ரன்கள் விளாச, பின்னால் வந்த வீர்ரகள் நிலைத்து நின்று ஆட தவறினர். இதனால்  20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று அசத்தியது.

இதனிடையே கடந்த போட்டிகளில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். 

இதன்பிறகு 2வது ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் 3வது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை நீக்கி தவறான முடிவை குஜராத் அணி எடுத்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.