குஜராத்தில் பரபரப்பு - 9 இஸ்லாமியர்களை நடுவீதியில் கைகளை கட்டி பிரம்பால் அடித்த போலீசார் - வைரல் வீடியோ

Gujarat Viral Video
By Nandhini Oct 05, 2022 06:03 AM GMT
Report

குஜராத்தில் 9 இஸ்லாமிய ஆண்களை பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் கைகளை கட்டி போலீசார் பிரம்பால் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

9 இஸ்லாமியர்களை பிரம்பால் அடித்த போலீசார்

குஜராத் மாநிலம், விஜயதசமியை முன்னிட்டு கர்பா என்னும் நடன நிகழ்ச்சியில் 9 இஸ்லாமியர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,  9 இஸ்லாமியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் பின்பு, கற்களை வீசியதற்காக கைது செய்யப்பட்ட 9 முஸ்லீம் ஆண்களை பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் மரத்தில் கைகளை கட்டி, 'பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கங்களுக்கு இடையே காவல்துறையினர் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

gujarat-police-viral-video