டெபாசிட் பணத்திற்கு வரி பிடிப்பு - மேனேஜரை பொளந்து கட்டிய வாடிக்கையாளர்

Gujarat India Money
By Karthikraja Dec 09, 2024 11:30 AM GMT
Report

வைப்பு நிதிக்கு வரி பிடித்ததற்காக வங்கி மேனேஜரை வாடிக்கையாளர் தாக்கியுள்ளார்.

வங்கியில் வரி பிடிப்பு

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் அவ்வபோது எஸ்எம்எஸ் சார்ஜ் என்பது போன்ற காரணத்தை கூறி பணம் பிடிப்பது நடந்து வருகிறது. இது சிறிய தொகையாக இருந்தால் வாடிக்கையாளர்கள் இதை பெருட்படுத்துவதில்லை. 

ahmedabad customer attack bank manager

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெய்மன் ராவல் என்பவர் அங்குள்ள யூனியன் வங்கியின் பிரேம்சந்த்நகர் கிளையில் வங்கி கணக்கு தொடங்கி வைப்பு நிதியாக (Bank FD) பணத்தை செலுத்தியுள்ளார்.

மேனேஜர் மீது தாக்குதல்

இதற்கான டி.டி.எஸ்., வரியை, வங்கி ஊழியர்கள் பிக்சட் டிபாசிட்டில் பிடித்தம் செய்து விட்டனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த ஜெய்மன் ராவல், வங்கி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 

இதில் வங்கி மேலாளரின் ஐடி கார்டை பிடித்து இழுத்து அவரை கடுமையாக தாக்கினார். அப்போது தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரையும் தாக்கினார். அவருடன் வந்த அவரின் தாயார் அவரை சமாதனம் செய்தார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "குறை தீர்க்கும் முறை வேகமாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். வங்கிகளும் டிடிஎஸ் விதிகளை போதுமான அளவில் விளம்பரப்படுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.