தூங்குவதில் தகராறு; மகளுக்கு 25 முறை கத்தி குத்து - மனைவியின் விரலை வெட்டி வீசிய கணவன்

Gujarat
By Sumathi Jun 01, 2023 04:59 AM GMT
Report

மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பான தகராறில் மகளை தந்தை கொலை செய்துள்ளார்.

மகள் கொலை 

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ(45). இவருக்கு, ரேகா என்ற மனைவியும், மகன்களும், சாந்தா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நேரத்தில்

தூங்குவதில் தகராறு; மகளுக்கு 25 முறை கத்தி குத்து - மனைவியின் விரலை வெட்டி வீசிய கணவன் | Gujarat Horror Man Repeatedly Stabbed His Daughter

மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பாக ராமானுஜுக்கும் அவரது மகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியும் மற்ற மகன்களும் தலையிட்ட நிலையில், கணவர் ராமானுஜ் ஆத்திரமடைந்துள்ளார்.

தந்தை வெறிச்செயல்   

வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளை சரமாரியாக குத்தி தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் பதறிப்போன மனைவி குறுக்கே பாய்ந்துள்ளார். இதில் அவருக்கும் கத்தி குத்து ஏற்பட்டு, 2 விரல்களை வெட்டியுள்ளார். இருப்பினும் ராமானுஜ் தனது மகளை ஆத்திரம் தீர கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராமானுஜை கைது செய்துள்ளார். மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.