2 பேயிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்! முதியவர் புகாரால் போலீசார் அதிர்ச்சி!

gujarat ghost murder attempt police complaint
By Anupriyamkumaresan Jul 03, 2021 08:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

குஜராத்தில் முதியவர் ஒருவர் தன்னை இரண்டு பேய்கள் கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர் என போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்த வர்சங்பாய் பரியால்சோ விவசாயியாக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்து தன்னை இரண்டு பேய்கள் துரத்துவதாகவும், அவரை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும், பேய்களிடமிருந்து தன் உயிரை காப்பாற்றும்படியும் புகார் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார்.

2 பேயிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்! முதியவர் புகாரால் போலீசார் அதிர்ச்சி! | Gujarat Ghost Attempt Murder Oldman Complainpolice

அவர் எழுது கொடுத்த புகாரில் "நான் எனது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு இரண்டு பேய்கள் வந்து என்னை கொல்லப்போவதாக மிரட்டின. நான் பயந்து போய் குடிசைக்கு வந்தேன். அது தொடர்ந்து என்னை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. என் உயிரை அது பறித்துவிடுமோ என பயமாக இருக்கிறது. என் உயிரை காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

இதை படித்ததும் போலீசாருக்கு இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து போலீசார் முதியவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு விரைந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

2 பேயிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்! முதியவர் புகாரால் போலீசார் அதிர்ச்சி! | Gujarat Ghost Attempt Murder Oldman Complainpolice

விசாரணையில், வர்சங்பாய் சில மாதங்களாக சைக்கியாட்ரிஸ்ட் மருத்துவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். அவர்கள் இவருக்கு மாத்திரை கொடுத்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக இவர் அந்த மாத்திரையை சாப்பிடவில்லை அதனால் இவர் குழப்ப நிலையில் கற்பனைக்கு சென்று விடுகிறார். அந்த கற்பனையையும் நிஜத்தையும் போட்டு குழப்பிக்கொள்கிறார். என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வர்சங்பாயிடம் பேசி அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.