இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த அமைச்சர்..வெளுத்து வாங்கிய மனைவி : வீடியோ வைரலானதால் சர்ச்சை!
குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வருபவர் பரத்சின் சோலாங்கி. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.
இவருக்கும் இவரின் மனைவி ரேஷ்மா படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் பரத்சின் சோலாங்கி ஹோட்டல் அறையில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்து கையும் கலவுமாக சிக்கியுள்ளார்.
गुजरात कांग्रेस नेता भरत सिंह सोलंकी को जब पत्नी ने रंगे हाथों दूसरी लड़की के साथ पकड़ लिया #BharatsinhSolanki pic.twitter.com/pQRRHFEypc
— Lutyens Watch (@LutyensWatch) June 1, 2022
நேற்று ஹோட்டல் அறையில் இளம்பெண்ணுடன் பரத்சின் சோலாங்கி தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரின் மனைவி ரேஷ்மா அவருடன் சில நபர்களை அழைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு தனிமையில் இருந்த அவரின் கணவர் மற்றும் அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கி அதை வீடியோவாக பதிவுசெய்தனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் இத்தகைய வீடியோ வெளியாகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.