குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? - போட்,டிக்கு தயாராகும் பாஜக தலைவர்கள்
குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் ஒரு சில மாதங்கள் தவிர்த்து குஜராத் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்கும் வரையில் குஜராத் மாநில முதல்வராக அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
மோடியைத் தொடர்ந்து ஆனந்தி பென் பட்டேலும், தற்போது விஜய் ரூபானியும் குஜராத் மாநில முதலமைச்சராகினர். இதனிடையே அடுத்தாண்டு குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். அவர் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படாததால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிவிட்டதால் பதவி விலகியதாகவும், முதலமைச்சர்களை மாற்றுவது பாஜகவில் இயல்பானது என்றும் விஜய் ரூபானி கூறியுள்ளார். துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ருபாலா, திரிவேந்த்ர சிங் ராவத், தீரத் சிங் ராவத், ஆகியோரின் பெயக்ரல் ஆகிய பெயர்கள் அடுத்த முதலைச்சர் பதவிக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அகமதாபாத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பி.எல். சந்தோஷ், பூபேந்தர் யாதவ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.