பதவியை இராஜினாமா செய்த பாஜக முதல்வர் : காரணம் என்ன?
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. விஜய் ரூபானி முதல்வராக இருந்துவந்தார்.
இந்தநிலையில் இன்று (11.09.2021) விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ரூபானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியை வலுப்படுத்தும் விதமாக பாஜக, விஜய் ரூபானியிடம் இருந்து முதல்வர் பொறுப்பை பறித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ரூபானி முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ., ஒரு அணியாக செயல்பட்டது. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.