குஜராத்தில் 8 மாதத்தில் மட்டும் 50 பேருக்கு தூக்குத் தண்டனை..! - வெளியான ரிப்போர்ட்

Gujarat
By Nandhini Sep 20, 2022 05:09 AM GMT
Report

குஜராத்தில் 8 மாதத்தில் மட்டும் 50 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை

2002ம் ஆண்டு அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்துள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பல்வேறு வழக்குகளில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

gujarat-capital-punishment