இந்தியாவை உலுக்கிய குஜராத் கேபிள் பாலம் விபத்து - விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்...!
இந்தியாவை உலுக்கிய குஜராத் மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்திற்கான காரண விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி அம்பலமாகியுள்ளது.
மோர்பி நகர் கேபிள் பாலம்
குஜராத்தில் மோர்பி என்ற நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இப்பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
பாலம் அறுந்து விழுந்து விபத்து
சமீபத்தில் சுற்றுலாத் தலமான விளங்கும் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பாலத்தில் பயணம் செய்த மக்கள், எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் பொத பொதவென விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்று தகவல் வெளியானது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.
9 பேர் கைது
மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் -
இது வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
மோர்பி தொங்கு பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தை சீரமைக்க ரூ.12 லட்சமே செலவிடப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஒரேவா குழும நிறுவனத்திற்கு கட்டுமான பணிகளில் முன் அனுபவமே கிடையாது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்பந்தம் எடுத்த ஒரேவா குழும நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திடம் துணை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
சீரமைப்பு பணிகள் 6 மாதத்தில் நிறைவடைந்துள்ளது.
பாலத்தின் அடிப்படை கட்டமைப்பில் சிறு கீறல் கூட செய்யப்படவில்லை. பாலத்தின் உறுதித்தன்மை முறையாக சோதிக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Suspension Bridge in BJP’s Gujarat collapsed. More than 400 people fell into water and got injured!
— YSR (@ysathishreddy) October 30, 2022
To be noted that, this bridge was renovated & opened just 5 days ago.
This is Gujarat’s development ? pic.twitter.com/8IQi9LHwZR