தாயுடன் தகாத உறவு - பலரின் முன்னிலையில் குடலை உருவி வீசிய மகன்கள்
தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை கொலை செய்து அவரின் குடலை வானை நோக்கி வீசியுள்ளனர்.
தாயுடன் உறவு
குஜராத் மாநிலம் காந்திநகரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் (27) மற்றும் ஜெயேஷ் தாக்கூர் (23). இவர்களது தந்தை, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் ரதன்ஜி தாக்கூர்(53) என்பவருக்கு இந்த சகோதரர்களின் தாயுடன் கடந்த சில ஆண்டுகளாகவே தகாத உறவு இருந்துள்ளது.
குடலை உருவிய மகன்கள்
சகோதரர்கள் இருவரும் தனது தாயுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ரதன்ஜியை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இருவரும் தங்களது உறவை தொடர்ந்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் கத்தி மற்றும் இரும்பு தடி போன்ற ஆயுதங்களுடன், ரதன்ஜி வேலை செய்யும் கட்டிட வேலை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளனர். ஜெயேஷ் தடியால் ரதன்ஜியின் தலையில் தாக்கினார். இதில் நிலை குலைந்து ரதன்ஜி கீழே விழுந்ததும், சஞ்சய் அவரது வயிற்றில் பலமுறை குத்தியுள்ளான். மேலும் ஆத்திரம் அடங்காமல் ரதன்ஜியின் குடலை வெளியே எடுத்து ஆக்ரோஷமாக வானில் வீசியுள்ளனர்.
சுற்றி இருந்தவர்கள் தடுக்க முயன்ற போது கத்தியை காட்டி அவர்களை அச்சுறுத்தியுள்ளனர். உடனடியாக இரு சக்கர வாகனத்தில் சகோதரர் இருவரும் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்போன் இருப்பிடங்களைப் பயன்படுத்தி சகோதரர்களை கைது சேது சிறையிலடைத்தனர்.