குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது...! - வைரலாகும் வீடியோ

Gujarat Viral Video
By Nandhini 2 மாதங்கள் முன்

குஜராத் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலம், தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம், திறப்பதற்கு முன்பே திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக இந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மேம்பாலம் சுவர் இந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. 

தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இது தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.   

gujarat-bridge-viral-video