உயிர்களை காவு வாங்கிய குஜராத் பாலம் : விபத்து ஏற்பட இதுதான் காரணம் , வெளியான பகீர் தகவல்
குஜராத் மாநிலம் மோர்பில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம்
மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மச்சி நதியின் குறுக்கே 1879ஆம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கும் பாலம் அமைக்கப்பட்டது சுற்றுலாத் தலமாக கருதப்படும் இந்த பாலம் பழுதடைந்த காரணத்தின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது
பாரம் தாங்காமல் விபத்து
நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர் பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாரம் தாங்க முடியாமல் அதில் இருந்த கேபிள்கள் அறுந்து விழுந்து ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர் . நீச்சல் தெரிந்த சிலர் தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர் குழந்தைகள் பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து நிலையில் மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டு விட்டனர் .
Over 100 people die in Morbi bridge collapse, says Gujarat Information Department
— ANI Digital (@ani_digital) October 31, 2022
Read @ANI Story | https://t.co/pAFpqmo5pf#Morbi #MorbiBridgeCollapse #MorbiGujarat #deathtoll pic.twitter.com/mXXtc79Q44
ஆனால், தற்போது வரை நூற்றுக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக என ani செய்தி வெளியிட்டுள்ளது
அனுமதி பெறவில்லை
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் பூபேந்திர பாட்டில் மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாலத்தை புனரமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் அதை திறக்கும் முன் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ஆகவே பாலத்தை நிரவகிக்கும் குழு மீது வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது