‘பதான்’ படம் சர்ச்சை - போஸ்டர்கள், கட்-அவுட்டுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்...!

Gujarat Viral Video Shah Rukh Khan
By Nandhini Jan 05, 2023 07:12 AM GMT
Report

‘பதான்’ படம் சர்ச்சையால், போஸ்டர்கள், கட்-அவுட்டுகளை இந்து அமைப்பினர் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பதான்’ படம் சர்ச்சை

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. இப்படம் இம்மாதம் திரையரங்கிற்கு வர உள்ளது.

இதனையடுத்து, சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியானது. இதில், ‘பேஷாராம் ரங்’ பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.

காவி நிறத்தில் பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பாடலை தடை செய்யக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

gujarat-bajrang-dal-pathaan-shah-rukhkhan-movie

போஸ்டர்களை கிழித்தெறிந்த கும்பல்

இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் ‘பதான்’ பட விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. ஆல்பா ஒன் மாலில் நடந்த

இந்நிகழ்ச்சியில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது, நடிகர் ஷாருக்கான் மற்றும் பிற நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், கட்-அவுட்டுகளை கிழித்து, அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.