கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்யத் துணிந்த பெண் - தலைமுடியை அறுத்து கொடூரமாக தாக்கிய கும்பல்..!

Gujarat Viral Photos
By Nandhini Dec 21, 2022 11:54 AM GMT
Report

குஜராத்தில் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்யத் துணிந்த பெண்ணை கொடூரமாக ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தலைமுடியை அறுத்து தாக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், குஜராத்தில் கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்யத் துணிந்ததால் 35 வயதுப் பெண் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, கம்பத்தில் கட்டி வைத்து, தலைமுடியை அறுத்து, இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

gujarat-attack-35-year-old-woman-viral-photo