?LIVE : குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 151 இடங்களில் தொடர்ந்து முன்னிலை
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 151 இடங்களில் தொடர்ந்து முன்னிலை.
பாஜக முன்னிலை
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது, குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 151 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் 19 இடங்களிலும், இந்த முறை புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவைகள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளன. குஜராத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 92 இடங்கள் அவசியம்.

இந்த நிலையில் பாஜக முன்னிலையில் இருப்பதால் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னிலை
இதுபோன்று, இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது. அங்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
அதாவது, இமாச்சல பிரதேசத்தில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னிலை பெற்று கடும் போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி ஒரு இடத்தில கூட முன்னிலை வகிக்கவில்லை, ஆனால், மற்றவை 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 இடங்கள் பிடிப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.