குஜராத்தில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்; 89 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு
குஜராத்தில் முதற்கட்டமாக 809 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தல்
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவானது காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவானது மாலை 5 மணிக்கு நிறைவு பெற உள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இன்று மாலை பேரணியாக செல்கிறார்.
மாலை தொடங்கும் இந்த பேரணி இரவு 9.45 மணி வரை நிறைவு பெறுகிறது. இதில் 50கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்க்கமாக பயணிக்கிறார்.
காலை தொடங்கிய வாக்குப்பதிவில் குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.