குஜராத்தில் 141 பேரை காவு வாங்கிய கேபிள் பாலம் விபத்து - இன்று துக்கம் அனுசரிப்பு...!
குஜராத்தில் கேபிள் பாலம் விபத்தில் உயிரிழந்த 141 பேருக்கு இரங்கல் தெரிவித்து இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மோர்பி நகர் கேபிள் பாலம்
குஜராத்தில் மோர்பி என்ற நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இப்பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
பாலம் அறுந்து விழுந்து விபத்து
சுற்றுலாத் தலமான விளங்கும் இப்பகுதியில் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பாலத்தில் பயணம் செய்த மக்கள், எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் பொத பொதவென விழுந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.

9 பேர் கைது
இந்நிலையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று துக்கம் அனுசரிப்பு
இந்நிலையில், குஜராத்தில் கேபிள் பாலம் விபத்தில் உயிரிழந்த 141 பேருக்கு இரங்கல் தெரிவித்து இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்திகள் கடந்த காலங்களில் பேரிடர்களையும் துயரங்களையும் ஒற்றுமையாக எதிர்கொண்டுள்ளனர். இன்று மோர்பி பாலம் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க குஜராத்திகள் இன்று ஒன்றுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பலர் தன்னுடைய சமூகவலைத்தளங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
The Gujarati stands with the families affected by the Morbi bridge tragedy#Gujarat_with_Morbi pic.twitter.com/Cv35xR5d0X
— Oreysamba (@oreysamba1) November 2, 2022
Gujarati government is helping those families which are affected by morbi incident.#Gujarat_with_Morbi pic.twitter.com/ftvochw2pG
— Pandit ji (@pandit_g_10) November 2, 2022