ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் - சலூனில் விழுந்த வாலிபர்கள்!! சிக்கியது எப்படி?
குஜராத்தில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தின் சூரத்தில் வேசு பகுதியில் உள்ள விஐபி சாலையில், உள்ள மார்வெல்லா வளாகத்தில் குல்தீப் சிங், நிலேஷ் சிங் என்பவரும் இணைந்து அம்பி ஸ்பா என்ற பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
இந்த பார்லரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல பெண்களை வைத்து அவர்கள் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். அங்கு வரும் ஆண்களிடம் ஆசையாக பேசி இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அதிரடியாக பியூட்டி பார்லரில் ரைடு நடத்தினர். அப்போது அங்கு இருந்த பல ஆண்கள் மற்றும் 18க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஸ்பா நடத்தி வந்த இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.