Viral Video: கின்னஸ் சாதனை படைத்த நாய்
கனடாவில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 நொடிகளில் மின்னல் வேகத்தில் தாவிக்குவித்து நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த ஜெனிபர் பிரேசர், ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த ”சார்டோன்” என்ற நாயை வளர்த்து வருகிறார்.
நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் திறமையான ஜெனிபர், சார்டோனை கின்னஸ் சாதனை படைக்க தயார்படுத்தினார்.
இதற்காக கடந்த ஜுன் 14ம் தேதி எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ் பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ 56 பேர் மைதானத்தின் புல்வெளியில் வரிசையாக இடைவெளியின்றி ஒரு பாலம் போல குனிந்து நின்றனர்.
கின்னஸ் சாதனைக்காக நடுவர்கள் சிக்னல் கொடுத்த அடுத்த நொடியே, சார்டோன் மனிதர்களின் முதுகுகளை மட்டுமே மிதித்து 16 நொடிகளில் அனைவரையும் கடந்து சென்றது.

இதனை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
மிக புத்திசாலியான சார்டோன் நுணுக்கமான பயிற்சிகளை பெற்றிருப்பதாக அதன் உரிமையாளரான ஜெனிபர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.
