நடிகர் கின்னஸ் பக்ருவிற்கு இவ்வளவு பெரிய மகளா! ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் கின்னஸ் பக்ரு தன் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கின்னஸ் பக்ரு மிக குறைந்த உயரத்தில் உள்ள மனிதர் முழுநீள படத்தில் நடித்தற்காக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து இவர் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.
அன்று முதல் இவரது பெயர் கின்னஸ் பக்ரு என்று அழைக்கப்பட்டது. மேலும் தமிழில் இவர் டிஷ்யூம், காவலன், ஏழாம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில், பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் இவர் அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பக்ருவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.