அதிகரிக்கும் GBS நோய் - 14 பேருக்கு வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை
GBS நோயால் ஒரு வாரத்தில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
GBS நோய்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக GBS(Guillain-Barre Syndrome) நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒருவாரத்தில் 47 ஆண்களும், 26 பெண்கள் என 73 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நரம்புகளை தாக்கும் நோய்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனே மாநகராட்சியும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் இணைந்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 7200 வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொற்று நோய் இல்லை என்றும் பீதியடைய வேண்டாம் என்றும் மகாராஷ்டிரா சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது. GBS என அழைக்கப்படும் இந்த நோயானது, நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் சொந்த நரம்புகளை தாக்குவதால் ஏற்படுவதாகும்.
சுவாச பிரச்சினை, பேசுவதில் மற்றும் விழுங்குவதில் சிரமம், உயர் இரத்த அழுத்தம், கை, கால்கள் பலவீனம் அடைவது, இதன் அறிகுறிகளாகும். நோய் தீவிரமடைந்தால் பக்கவாதம் கூட ஏற்படலாம். இந்த நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்குகிறது. நோய் அறிகுறி நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.