மைடியர் ஸ்டூடண்ட் ஆரம்பிக்கலாங்களா ? கல்வி நிலையங்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

school opening guidelines TNGovt highereducation
By Irumporai Aug 27, 2021 09:11 AM GMT
Report

வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 1 2 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,பள்ளி வகுப்பறைகள்,வளாகங்கள் தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 வழிகாட்டு நெறிமுறைகள் :

ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமவாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

மாணவர்களை அமரவைப்பதில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்

. வகுப்புகள், ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்தப் பகுதியிலும் மாணவர்கள் உடல்சமூக இடைவெளியைப் பராமரித்து, முக கவசம் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் 100% அளவிற்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு இடைவேளை நேரங்கள் வழங்கப்படும். கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம்.

மேலும்,வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பாடம் கற்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களிடையே உணவைப் பகிர அனுமதிக்கக் கூடாது.

நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும்,ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தபப்டும்.

ஒவ்வொரு பள்ளியும் மேற்பார்வையிட ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மாணவ்ர்கள் உடல்நிலை அவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்க செவிலியர் மற்றும் மருத்துவர் மற்றும் ஆலோசகர்,சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்

. நடமாடும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக் குழுக்களின் தொடர்பு எண்கள் பள்ளிகளில் உடனடியாகக் கிடைக்க வேண்டும்.

கொரோனா தொற்றுநோய் குறித்து எடுக்கப்பட வேண்டிய பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்கள் ஊழியர்களிடையே சுகாதாரத் துறை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வகுப்பறைகளில் குளிர்சாதனத்தை பயன்படுத்தக்கூடாது. வெளியில் இருந்து விற்பனையாளர் யாரும் பள்ளி வளாகத்திற்குள் அல்லது நுழைவு வாயில் அல்லது வெளியேறும் இடத்தில் சாப்பிடக்கூடிய பொருட்களை விற்க அனுமதிக்கக்கூடாது.

கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால் மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்.

மாணவர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்காக ஆலோசகர் ஆசிரியர் அல்லது ஒரு ஆலோசகரின் வழக்கமான வருகைக்கான ஏற்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.

காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் கைகளை சுத்தம் செய்வது, தடுப்புகள் அமைத்து மாணவர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் வழி வகுக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் பாதித்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலிருக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் தங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இதுபோன்ற நோக்கங்களுக்காக கை சுத்திகரிப்பான்கள்(hand sanitizers) இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை அறியும் கருவி, ஆக்ஸி மீட்டர் போன்ற கருவிகளை பள்ளி தொடங்கும் முன் வைத்திருப்பது மிகவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..