பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 55 பேர் பரிதாப பலி
பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலாவில் நேற்று(10.02.2025) 71 பயணிகளுடன் பேருந்து ஒன்று, எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமாலா நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று(10.02.2025) அதிகாலை பேருந்தானது பாலத்தில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் ஓரத்தில் இருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி 115 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள கழிவு நீர் கலக்கும் ஆற்றில் விழுந்துள்ளது.
55 பேர் பலி
தகவலறிந்து மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். உயிரிழந்த 53 பேரின் உடலை மீட்டதோடு, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவாட்டமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ, “3 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை அனுப்பியுள்ளார். மேலும், "இன்று கவுதமாலா தேசத்திற்கு ஒரு கடினமான நாள்" என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து 30 ஆண்டுகள் பழமையானது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என என தகவல்தொடர்பு அமைச்சர் மிகுவல் ஏஞ்சல் டயஸ் தெரிவித்துள்ளார்.