குஜராத்திடம் அடிவாங்கிய ராஜஸ்தான் அணி - 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நவி மும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் மேத்யூ வேட் 1, விஜய் ஷங்கர் 2, சுப்மன் கில் 13 ரன்களிலும் அவுட்டாயினர். இதனைத் தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், அபினவ் மனோகரும் ராஜஸ்தான் பந்துவீச்சை அடித்து ஆடினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 87 ரன்களும், அபினவ் மனோகரும் 43 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே குஜராத் பந்துவீச்சில் தடுமாற தொடங்கியது.
அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் 54 ரன்கள் விளாச, பின்னால் வந்த வீர்ரகள் நிலைத்து நின்று ஆடாததால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று அசத்தியது.