பெங்களூர் அணியை துரத்தும் தோல்வி - முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய அந்த அணி விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். அதன்பின் மேக்ஸ்வெல் 33 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது
தொடர்ந்து 171 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் வீரர்கள் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் திவாட்டியா 43, டேவிட் மில்லர் 39, சுப்மன் கில் 31, விருத்திமான் சஹா 29 ரன்கள் எடுத்ததால் அணியின் வெற்றி எளிதானது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.