குஜராத்தை மிரட்டிய ஆண்ட்ரூ ரஸல் ஆட்டம் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
நவிமும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 67 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ரஸல் 1 ஓவர் வீசி 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களம் கண்டது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆண்ட்ரூ ரஸல் அதிரடியால் குஜராத் அணியினர் இடையே தோல்வி பயம் ஏற்பட்டது.
அதிரடியாக ஆடிய ஆண்ட்ரூ ரஸல் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்த போதிலும், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.