சாய் கிஷோரை சரமாரியாக திட்டி பந்தை தூக்கி அடித்த சிராஜ் - கண்டுக்கொள்ளாத சுப்மன் கில்
தமிழக வீரர் சாய் கிஷோரை, முகமது சிராஜ் திட்டிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
GT vs CSK
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.அப்போது முகமது சிராஜ் பந்து வீசினார்.
அந்த சமயத்தில் உர்வில் படேல் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் ஓடினார். ரன் ஓடி முடித்துவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்தை தூக்கி எறிந்து ரன் அவுட் செய்ய முயன்றார். அது ஓவர் த்ரோ ஆனது.
வைரல் வீடியோ
இதனால் ஒரு ரன் ஓடிய உர்வில் படேல், சாய் கிஷோர் செய்த தவறைப் பார்த்து மேலும் ஒரு ரன் ஓடினார். அந்த ஒரு பந்தில் மட்டும் மூன்று ரன்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஃபீல்டிங் தவறுகள் நடந்ததைப் பார்த்த முகமது சிராஜ் கோபமடைந்தார்.
— The Game Changer (@TheGame_26) May 25, 2025
ஆனால் தவறு செய்த சுப்மன் கில் மீது அவர் கோபத்தை காட்டாமல், சாய் கிஷோரிடம் கோபத்தை காட்டினார். சாய் கிஷோரைப் பார்த்து திட்டிய சிராஜ், பந்தை வாங்கியவுடன் தூக்கித் தரையில் அடித்தார்.
அதன் பின்னர்தான் கில் அவர் அருகே வந்து சமாதானம் செய்ய முயன்றார். இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.