ஜி.எஸ்.டி. வரி முறை ஆட்டம் கண்டுதான் உள்ளது:நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படுவதில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.:
அதில், ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
மக்கள்தொகை அடிப்படையில், ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்கு அளிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுதான் உள்ளது என்றார்.
மேலும் ,முழு ஆய்வு இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நீடிக்க முடியும்.
தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிகளவில் வரிப்பணத்தை கொடுக்கின்றன.
அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.