செட்டில்மெண்ட் ஓவர் - தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு
By Irumporai
தமிழ்நாட்டிற்கு ரூ.9, 062 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.
மே 31ம் தேதி வரை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

மாநில அரசுகள் இனி அடுத்தடுத்த மாதங்களுக்கு தான் நிதியை கேட்டுப் பெற வேண்டுமே தவிர மே 31ம் தேதி வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளும் முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது