இந்த மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது - புதிய சலுகைகளை அறிவித்த நிர்மலா சீதாராமன்!

nirmalasitharaman gst newoffer
By Irumporai Jun 12, 2021 10:50 AM GMT
Report

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் 

 மருத்துவ பொருட்களுக்கு புதிய சலுகைகளை  அறிவித்தார்.

புதிய சலுகைகள்:

கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி 12 சதவிதத்தில் இருந்து 5 சதவிதம் ஆக குறைப்பு.

கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

. மருத்துவ ஆக்சிஜனுக்கான ஜிஎஸ்டி 12 சதவிதத்தில் இருந்து 5% ஆக குறைப்பு

. சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கொரோனா தடுப்பூசிகளுக்கும்  5% ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபடுவதாக நிதியமைச்சர் கூறினார்.