அமெரிக்காவில் கடும் பனி புயல்; சாலை விபத்தில் 2 பேர் பலி - 1,700 விமான சேவை ரத்து..!

Viral Video United States of America Winter Season
By Nandhini Feb 01, 2023 07:48 AM GMT
Report

அமெரிக்காவில் கடும் பனி புயல் தாக்கத்தால், சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடும் பனி புயல்

அமெரிக்காவில் பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலால் பல நகரங்கள் கட்டிடங்கள், சாலைகள் பனியால் படர்ந்து மூடிக்காணப்படுகிறது.

இந்த பனிப்புயலால் டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், டல்லாசின் லவ் பீல்டு விமான நிலையத்தில் 250 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், மொத்தம், 1,700 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனிப்புயலால் டெக்சாஸில் 7 ஆயிரம் இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் காரணமாக மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த பனி புயல், டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ் மற்றும் டென்னசி மாகாணங்களில் இன்றும் தாக்க நேரிடும் என்று அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.