குரூப் 1 தேர்வில் இத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதவில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

Government of Tamil Nadu
By Thahir Nov 19, 2022 12:40 PM GMT
Report

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

1.31 லட்சம் பேர் எழுதவில்லை

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

குரூப் 1 தேர்வில் இத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதவில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல் | Group1 One Lakh People Absent In Exam

தமிழகம் முழுவதும், 1080 இடங்களிலும், சென்னையில் மட்டும் 149 இடங்களிலும் நடைபெற்றது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை; 1.90 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.