குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

By Irumporai Aug 22, 2022 04:47 AM GMT
Report

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

குரூப் 1 தேர்வு

கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிப்பை வெளியிட்டது.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு | Group 1 Exam Today Is The Last Day

இன்றே கடைசி

இந்த நிலையில், http://tnpsc.gov.in என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. மேலும், 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.