92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு

Government of Tamil Nadu
By Irumporai Jul 21, 2022 04:49 AM GMT
Report

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

TNPSC அறிவிப்பு

இந்த நிலையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு | Group 1 Competitive Examination Notification

அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வு

மேலும் குரூப்-1 பிரதான தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.

எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது