திருமணம் முடிந்ததும்.. மனைவியின் முக்காடை விலக்கிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி
புது மாப்பிள்ளைக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரோக்கர் ஏற்பாடு
மத்திய பிரதேசம், ராஜ் கார்க் நகரை சேர்ந்த ஐடி ஊழியர் கமல். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது திருமண புரோக்கர் ஒருவர் ஏற்பாட்டின் மூலம், பெண் ஒருவருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து கமலின் வீட்டுக்கு அந்த புது பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். பின் முதலிரவில் பெண்ணின் முகத்தை பார்த்த கமல் ஷாக் ஆகியுள்ளார்.
ஏனென்றால், அவர் தாலி கட்டியது ஒரு பெண் முதலிரவு அறையில் அலங்காரத்துடன் இருந்தது மற்றொரு பெண். உடனே, பெண்ணை குடும்பத்தினர் பிடித்து அறைக்குள் அடைத்து வைத்து விசாரித்துள்ளனர்.
பெண் மோசடி
அதில், இளம் பெண் ஒருவரின் முகத்தை காட்டி திருமணம் செய்து வைத்து நிலையில் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் வேறு ஒரு பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். மணமகனின் குடும்பத்தினர் தூங்கும் நேரத்தில் வீட்டில் உள்ள நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல அந்த பெண் திட்டம் தீட்டியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மணமகன் உள்ளிட்டவரை மயக்கமடைய வைக்க குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்க தயாராக இருந்துள்ளனர். தற்போது மணமகளாக நடித்த பெண், இடைத்தரகர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.