முதலிரவில் மனைவியை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் - பகீர் பின்னணி!

Pregnancy Marriage Madhya Pradesh
By Sumathi Apr 18, 2023 07:59 AM GMT
Report

முதலிரவில் மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்து கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

முதலிரவில் அதிர்ச்சி

மத்திய பிரதேசம், ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் முதலிரவு அன்று தம்பதி தனிமையில் இருந்த போது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் 7-8 தையல் போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முதலிரவில் மனைவியை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் - பகீர் பின்னணி! | Groom Shock Saw Wife Stomach First Night

அதுகுறித்து கேட்டதில் மனைவி மழுப்பலான பதில் தெரிவித்துள்ளார். ஆனால், கணவருக்கு சந்தேகம் அதிகரித்ததால் தீவிரமாக விசாரித்துள்ளார். அதில் தான் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளார்.

கர்ப்பம்

அந்த நபர் மூலம் பெண் கர்ப்பமடைந்த நிலையில், மூன்று மாதத்திற்குப் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைத்துள்ளார். இந்த உண்மையை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்று கணவர் அந்த தகவலை உறுதிப்படுத்திய நிலையில்,

மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். இதற்கிடையில், பெண்ணின் வீட்டார் கணவர் மீது எதிர் வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கோரியுள்ளனர். அதனையடுத்து, கணவர் இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.