வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகளுக்கு முத்தம் : கோபத்தில் மணமகள் எடுத்த விபரீத முடிவு

By Irumporai Dec 01, 2022 06:39 AM GMT
Report

விருந்தினர் முன்னிலையில் மணமகன் மணமகளை முத்தமிட்டாதால் கோபமான மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

 மணமகளுக்கு முத்தம்

உத்திரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27 ம் தேதி இரவ்ய் விவேக் அக்னிகோத்ரி என்ற வாலிபருக்கும் , அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

இந்த திருமண நிகழ்ச்சியில் மணமகன் விவேக் திடீரென மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார் , இதில் கோபமும் அதிர்ச்சியும் அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து காவல்துறையிம்னரிடன் அந்த பெண் கூறுகையில் : நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாதமுறையில் தொட்டார். உடனே நான் அதை தடுத்தேன். பின்னர் அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகளுக்கு முத்தம் : கோபத்தில் மணமகள் எடுத்த விபரீத முடிவு | Groom Kisses Her In Front Of Guests In Sambhal

அவர் என் சுயமரியாதையை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்டார். எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்? என பயமாக இருக்கிறது. எனவே அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.

மணமகளின் தாயார் கூறுகையில், எனது மருமகனின் நண்பர்கள் தூண்டுதலின் பேரிலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

இப்போது என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை. நாங்கள் சமாதானப்படுத்தியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நாங்கள் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

பந்தய முத்தம்

இது குறித்து மணமகன் கூறுகையில், குற்றச்சாட்டுகளை மறுத்து, முத்தம் தனக்கும் அவரது மணமகளுக்கும் இடையிலான பந்தயத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். மேடையில் அனைவர் முன்னிலையிலும் மணமகன் முத்தமிட்டால், 1500 ரூபாய் தருவதாக மணப்பெண்ணிடம் பந்தயம் கட்டியதாக கூறியுள்ளார்.

இதை செய்ய முடியாவிட்டால், மணமகளுக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும். இது குறித்து மணப்பெண்ணிடம் ஸ்டேஷன் இன்சார்ஜ் கேட்டபோது, ​​தங்களுக்குள் எந்த பந்தமும் போடவில்லை என்று கூறினார். இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.