திருமணத்தன்று மணமகள்,மாமியார் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன் - வெறிச்செயல்!
லிவிங் டுகெதர்
தாய்லாந்து நாட்டின் பேங்காக் பகுதியைச் சேர்ந்தவர் சதுரோங் சுக்சுக் (29). இவர் காஞ்சனா பசுந்துேக் (44) என்ற பெண்ணை காதலித்து, கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் சுக்சுக், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காஞ்சனா, அவரின் தாய் கிந்தாங், சகோதரி மனடோ, இரண்டு உறவினர்கள் என 4 பேரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.
சுட்டுக்கொலை
பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலியானோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சுக்சுக் லிவிங் டுகெதர் வாழ்க்கையை கைவிடும் எண்ணத்தில் இருந்திருக்கலாம், பெண்ணின் தரப்பு வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து, இறுதியில் அவர்களையும் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்து இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.