திருமணமான 43 நாட்களில் புதுப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற மாப்பிள்ளை
சேலத்தில் திருமணமான 43 நாட்களில் புதுப்பெண்ணை கொன்று விட்டு மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. சேலத்தின் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், விவசாயியான இவர் வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் பொறுத்தும் பணியும் செய்து வருகிறார்.
இவருக்கும், மோனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 43 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்படவே, கடும் கோபத்தில் இருந்த தங்கராஜ், மோனிஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மோனிஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறக்கவே, தங்கராஜ் கேபிள் வயரை எடுத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர், தங்கராஜ் பிணமாக தொங்கியுள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள், இருவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.