சவப்பெட்டியிலிருந்து திடீரென எழுந்த மணமகன் - அதிர்ச்சியில் உறவினர்கள்!
மணமகன் சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
திருமணம்
திருமண மண்டபத்திற்கு சவப்பெட்டியை எடுத்து வரும் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. ஏனெனில் அதில், திருமணத்திற்கு வந்திருக்கும் சிலர் சவப்பெட்டி ஒன்றை காருக்குள் இருந்து இறக்கி எடுத்து வருகின்றனர்.

அவர்கள் சிரித்துக் கொண்டே அதனை எடுத்து வருவது விசித்திரமாகவும் இருந்தது. தொடர்ந்து அந்த பெட்டியை திருமணம் நடக்கும் மேடைக்கு கொண்டு சென்று திறக்கின்றனர். அதிலிருந்து மணமகன் வெளியே வருகிறார்.
வைரல் வீடியோ
இதனைக் கண்ட விருந்தாளிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அதன்முன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ 8 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதனை வேடிக்கையாக பார்த்தாலும்,
திருமணம் என்பது அனைவரும் மதிக்கக்கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு, அதில் இப்படி விளையாட்டாக விசித்திர சாகசங்கள் செய்வது ஏற்புடையதல்ல என பலர் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.